பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் மாணவ-மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2015

பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் மாணவ-மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு


சென்னையில் 10-வது வகுப்பு, பிளஸ்-2 பரீட்சை எழுதிய மாணவ, மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் மூலம் அறிவுரை வழங்கி வருகிறார்கள். பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.

பெண் போலீசார் பிரசாரம்

சென்னையில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், அனைத்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் தங்கள் போலீஸ் நிலையங்களில் வேலைபார்க்கும் பெண் போலீசாருடன், தெரு, தெருவாக சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 10-வது வகுப்பு, பிளஸ்-2 பரீட்சை எழுதிய மாணவ-மாணவிகளை பள்ளிகளுக்கும் வரவழைத்து விழிப்புணர்வு பிரசார கூட்டங்களை நடத்துகிறார்கள். இந்த கூட்டங்களுக்கு பெற்றோர்களும் வரவழைக்கப்படுகிறார்கள்.விழிப்புணர்வு பிரசார கூட்டங்களில் விரைவில் 10-வது வகுப்பு, பிளஸ்-2தேர்வு முடிவுகள் வெளிவரப்போகிறது. தேர்வு முடிவில் பெயிலாகும் மாணவ, மாணவிகள் மனம் உடைந்து தற்கொலை முடிவுக்கு போகக்கூடாது என்றும், பெயிலான பாடங்களில் அடுத்த ஒருமாதத்தில் மீண்டும் பரீட்சை எழுதி பாஸ் செய்துவிடலாம் என்றும் விழிப்புணர்வு அறிவுரைகள் சொல்லப்படுகிறது.

கண்டிக்கக்கூடாது...

பெற்றோர்களுக்கும் பெண் போலீசார் அறிவுரை வழங்கி வருகிறார்கள். பெயிலாகும்தங்கள் பிள்ளைகள் மனசு உடையும் வகையில் தகாத வார்த்தைகளால் பேசி திட்டக்கூடாது என்றும், பெயிலாகும் தங்கள் பிள்ளைகளுக்கு தைரியம் கொடுத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.தோல்வி என்பது வெற்றியின் படிக்கட்டுதான். அதற்காக மனம் துவண்டுபோய் தற்கொலை மூலம் உயிரைவிடாமல், மீண்டும் பரீட்சை எழுதி பாஸ் செய்து வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்றும் பெண் போலீசார் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வேப்பேரி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா ராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயலாலி, விஜயசந்திரிகா ஆகியோர் புரசைவாக்கம், வேப்பேரி, சூளை ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இந்த பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மற்ற பகுதி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் இதுபோல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி