தொழில்நுட்ப தேர்வு சான்றிதழில் கெடுபிடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2015

தொழில்நுட்ப தேர்வு சான்றிதழில் கெடுபிடி

'கலைப்பாட தொழில்நுட்பத் தேர்வு சான்றிதழ்களை, மூன்று நாட்களுக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என, கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதுபோதாது என்பதால், கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்' என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஓவியம், தையல், இசை, நடனம், விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய பாடங்களுக்கு, அரசுத் தேர்வுத் துறையால், 2014, ஏப்ரலில் தொழில்நுட்பத் தேர்வு நடந்தது; 48,567 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் நான்கு மாதங்களில் வெளியிடப்பட வேண்டும். ஆனால், ஓராண்டாக வெளியிடப்படவில்லை.




இதுகுறித்து, தேர்வு எழுதியோர் சார்பில், கலை ஆசிரியர்கள் சங்கத்தினர், அரசுக்கு பல்வேறு மனுக்களை அளித்தனர். இந்நிலையில், ஓராண்டாக இழுத்தடித்த தேர்வு முடிவுகள், ஏப்., 22ல் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இணையதளத்திலோ அல்லது செய்தித்தாள் விளம்பரமாகவோ வெளியாகவில்லை. வெற்றி பெற்றவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், இன்ற முதல் வரும், 29ம் தேதி வரை, சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்று, மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.




இத்தேர்வை பல்வேறு மாநிலத்தினர் தமிழகத்துக்கு வந்து எழுதினர். அவர்கள் எந்த முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம் செல்வது என்ற விவரங்களோ, யார் பாஸ், யார் எவ்வளவு மதிப்பெண் பெற்றனர் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.இதுகுறித்து, கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:தேர்வு முடிவை இணையதளத்தில் வெளியிடாததால், பெரும்பாலானோருக்கு விவரம் தெரியவில்லை. எனவே, இந்த மூன்று நாட்களில் சான்றிதழ்களை வாங்குவது இயலாத காரியம்.




பலர் வெளியூர், வெளிமாநிலங்களில் உள்ளனர். முன்பெல்லாம், 30 நாட்கள் சான்றிதழ் வினியோகம் நடக்கும். அதேபோல், இம்முறையும் சான்றிதழ் வழங்குதலை, 30 நாட்கள் நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி