கோவையில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்; மலுமிச்சம்பட்டியில் அமைய வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2015

கோவையில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்; மலுமிச்சம்பட்டியில் அமைய வாய்ப்பு


கோவையில், புதிதாக மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படுகிறது.தமிழக அரசின் அரசாணை விவரம்:
கோவை, தர்மபுரி, பெரம்பலுாரில், புதிதாக மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்க, கடந்த 2011ல், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவனம் சார்பில், அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில், வரும் 2016-17ம் கல்வியாண்டு முதல், மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும், புதிதாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அமைத்து செயல்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.மற்ற ஆசிரியர் பயற்சி நிறுவனங்களைப் போன்று, அனைத்து பாடப்பிரிவுகளுடன் கூடியமுதலாமாண்டு வகுப்பு துவக்கப்படும். வரும் 2016-17 கல்வியாண்டு துவங்கியபின், மத்திய மற்றும் மாநில அரசின், 75 மற்றும் 25 சதவீத நிதி ஒதுக்கீடு முறை, இந்நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

உடுமலை, திருமூர்த்திநகரிலுள்ள மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தன் கூறுகையில்,''கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு விரைவில் வழங்கப்படும் வாய்ப்புள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி