state board exam result... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2015

state board exam result...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2377 மையங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இதற்கான விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் உள்ள 3,298 மையங்களில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். 

இவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 75 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் மூலம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிள்ஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி காலை 10 மணிக்கும், +2 பொதுத் தேர்வு முடிவுகள் மே.7ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி