எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' கணக்கிடுவது எப்படி?:கடந்த ஆண்டை விட 0.5 குறையும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2015

எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' கணக்கிடுவது எப்படி?:கடந்த ஆண்டை விட 0.5 குறையும்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' மதிப்பெண் கடந்த ஆண்டை விட, 0.5வரை குறையும் என்பதால், கடந்த ஆண்டில், கடைசி கட்டத்தில் வாய்ப்பை இழந்த பலரும், புதிதாக இணைய வாய்ப்பு வருகிறது. தமிழகத்தில், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி, 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.இதில், மாநிலத்திற்கு, 2,172 எம்.பி.பி.எஸ்., - 85 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன.
சுய நிதி கல்லூரிகளில் இருந்து, 600 இடங்கள் வரை கிடைக்கும்.
விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.எம்.பி.பி.எஸ்., படிப்பை பொறுத்தவரை, இயற்பியல் - 50; வேதியியல் - 50; உயிரியல் - 100 என, மொத்தம், 200 மதிப்பெண்களுக்கு, 'கட் - ஆப்' தயாரிக்கப்படும்.
*இயற்பியல் மற்றும் வேதியியலில் மாணவர் பெற்ற மதிப்பெண்களில், 25 சதவீதம்,'கட் - ஆப்' ஆக சேரும். (இயற்பியல் - 200 என்றால், 50; வேதியியல் - 198 என்றால், 49.5)*தாவரவியல், விலங்கியலும் சேர்ந்து, 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட வேண்டும். மொத்த மதிப்பெண்; 400. மாணவர் பெற்ற மதிப்பெண்ணில், 25 சதவீதம் சேரும் (தாவரவியல் - 200; விலங்கியல் - 190; மொத்தம்- 390. இதில், 25 சதவீதம் - 97.5)
*ஒரு மாணவர் இயற்பியல் - 200 என்றால், 50.00; வேதியியல் - 198என்றால், 49.50; தாவரவியல் - 200; விலங்கியல் - 195 என, இரண்டும் சேர்த்து, 395 என்றால், 98.75 என சேர்ந்து, மொத்த, 'கட்-ஆப்' - 198.25 என கணக்கிடப்படும்.பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில், கடந்த ஆண்டை விட, 'சென்டம்' எடுத்தோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், 'கட் - ஆப்' மதிப்பெண், கடந்த ஆண்டை விட, 0.5 வரை குறையும். இதனால், கடந்த ஆண்டு, 'கவுன்சிலிங்' சென்று, கடைசி நேரத்தில், எம்.பி.பி.எஸ்., சேர முடியாதோர், இந்தஆண்டில் சேர வாய்ப்பு உள்ளது என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி