1,164 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி40,116 பேர் 'சென்டம்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2015

1,164 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி40,116 பேர் 'சென்டம்'


பத்தாம் வகுப்புத் தேர்வில், 1,164 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு பேர், தமிழ் பாடத்தில்,'சென்டம்' வாங்கியுள்ளனர்.இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:
அரசு பள்ளிகள், கடந்த ஆண்டை விட, 3.33 சதவீதம், இந்த ஆண்டு அதிகமாக பெற்று, 89.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாணவர்களை விட மாணவியர், 6.9 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில், 19 அரசு பள்ளிமாணவ, மாணவியர் மாநில, 'ரேங்க்' பெற்றுள்ளனர்.2012ல், 358; 2013ல் 453; 2014ல், 558 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றன. தற்போது, 1,164 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இது, கடந்த ஆண்டை விட, 606 பள்ளிகள் அதிகமாகும்.தமிழில், இரண்டு மாணவர்கள், 'சென்டம்' வாங்கியுள்ளனர். ஆங்கிலத்தில், 10; கணிதத்தில், 2,539; அறிவியலில், 27,157; சமூகஅறிவியலில், 10,408 பேர் என, மொத்தம் 40,116 பேர், 'சென்டம்' வாங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி