அரசு பள்ளிகளில் 11-வது வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் : பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2015

அரசு பள்ளிகளில் 11-வது வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் : பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை


அரசு பள்ளிகளில் 11-வது வகுப்பில் மாணவர் சேர்க்கையைஅதிகரிக்கவேண்டும்என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாணவர் சேர்க்கை பள்ளி கல்வித் துறையில் 2015-16-ம் கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.

1. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) அன்று வெளியிடப்பட உள்ளது. தேர்ச்சி பெற்ற உடன்அனைத்து மாணவ, மாணவிகளையும் தங்கள்பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

2. அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் ஜூன் 15-ந்தேதி முதல் 11-ஆம் வகுப்புகள் தொடங்கப்படும்.

3. தமது பள்ளிக்கு அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அப்பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் 11-ஆம் வகுப்பில் சேர்க்க வேண்டும்.

புதிய பாடப்பிரிவு

4. அதிக அளவில் மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் பாடப் பிரிவினை ஏற்படுத்துதல் பற்றிய தகவல் தெரிவியுங்கள்.

5. சென்ற கல்வி ஆண்டில் ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் பயின்ற பாடப் பிரிவுக்கு உடன் இக்கல்வி ஆண்டில் ஆசிரியர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுங்கள்.

6. பாடப்பிரிவு மாற்றம் செய்ய வேண்டிய நிலை அல்லது புதிய பாடப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டிய நிலை உள்ள பள்ளிகளில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி