1,388 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2015

1,388 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று மறுப்பு

தமிழகத்தில் பள்ளி வாகனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பாதுகாப்பு குறைபாடுகாரணமாக 1,388 வாகனங் களுக்கு தகுதிச் சான்று மறுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம் 37,107 வாகனங்கள் இயக்கப்படுகின் றன. இதில், பள்ளிகளுக்கு மட்டுமே 23,444 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த வாகனங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த 11-ம் தேதி முதல் பள்ளி வாகனங்களில் வட்டார போக்குவரத்து அலுவல கம் சார்பில் ஆய்வு நடத்தப்பட் டன.இது தொடர்பாக போக்கு வரத்து துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, “இதுவரை 14,597 வாகனங்களில் ஆய்வு கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில், 13,209 பள்ளி வாகனங் களுக்கு தகுதிசான்று (எப்.சி) வழங்கப்பட்டுள்ளது. அவசர கதவு, தீயணைப்பு கருவிகள் இயங்காதது, படிகளில் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு குறைபாடு காரணமாக 1,388 வாகனங்களுக்கு தகுதிசான்று வழங்க வில்லை. குறைபாடுகளை சரிசெய்தால் வாகனங்களை இயக்க தகுதிசான்று அளிக்கப்படும்’’ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி