இன்று போலீஸ் எஸ்.ஐ., தேர்வு: 1.66 லட்சம் பேர் எழுதுகின்றனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2015

இன்று போலீஸ் எஸ்.ஐ., தேர்வு: 1.66 லட்சம் பேர் எழுதுகின்றனர்


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும், போலீஸ் எஸ்.ஐ., தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது.தமிழக காவல் துறையில் காலியாக உள்ள, 1,078 எஸ்.ஐ., காலி பணியிடங்களுக்கு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு நடக்கிறது.
பொது ஒதுக்கீடுதாரர்களுக்கு இன்றும், போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நாளையும் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை, 1.66 லட்சம் பேர் எதிர்கொள்கின்றனர். அதற்காக, 32 மாவட்ட தலைநகரங்களில், 114 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில், அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி உட்பட, 22 மையங்களில் தேர்வு நடக்கிறது.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்ற, சென்னை, கிண்டி, பட்ரோடு பகுதியை சேர்ந்த, திருநங்கை ப்ரித்திகா யாஷினி உட்பட, 50க்கும் மேற்பட்டோருக்கு, நுழைவுச்சீட்டு தரப்பட்டு, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி