திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதிபள்ளிகள் திறக்கப்படும்: இயக்குனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2015

திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதிபள்ளிகள் திறக்கப்படும்: இயக்குனர்

''பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி,பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, கல்வித் துறை அறிவித்திருந்தது.
ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள தால், மாணவர் நலன் கருதி, பள்ளி திறக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர், தனியார் பள்ளி நிர்வாகிகள், அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.இதனால், பெற்றோர், மாணவ, மாணவியர் மத்தியில், ஒருவித குழப்பம் நிலவி வருகிறது. இதுகுறித்து, தினமும், மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, நேரடியாகவும், போன் வாயிலாகவும், பெற்றோர் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:பள்ளிதிறக்கும் தேதியில், எவ்வித மாற்றமும் செய்யவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்.பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகின்றன. பெற்றோர், எவ்விதகுழப்பமும் அடைய தேவையில்லை.இவ்வாறு, அவர்தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி