அனைத்து தபால் நிலையங்களிலும்2017க்குள் 'கோர் பேங்கிங்'வசதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2015

அனைத்து தபால் நிலையங்களிலும்2017க்குள் 'கோர் பேங்கிங்'வசதி

''இன்னும் இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள, அனைத்து தபால் நிலையங்களிலும், 'கோர் பேங்கிங்' வசதிகள் ஏற்படுத்தப்படும்,'' என, தபால் துறை தமிழக தலைவர் ராமானுஜன்தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தலைமை தபால் நிலையத்தில், ஏ.டி.எம்., மையத்தை திறந்து அவர் பேசியதாவது: நாட்டில், 800 தலைமை தபால் நிலையங்கள், 1,790 துணை தபால் நிலையங்கள் உட்பட, 2,590 தபால் நிலையங்களில், 'கோர்பேங்கிங்' வசதி உள்ளது.தென் மண்டலத்தின் முதல் ஏ.டி.எம்.,ஐ, காரைக்குடியில் திறந்துள்ளோம்.
இன்னும், 15 நாட்களில், பழநி, ஜூன் இறுதியில், திண்டுக்கல்லில் ஏ.டி.எம்.,கள் திறக்கப்படும்.வரும், 2017, மார்ச் மாதத்திற்குள்
, மாநிலத்தில் உள்ள, அனைத்து தபால் நிலையங்களிலும், 'கோர் பேங்கிங்' வசதி வந்துவிடும். 650 ஏ.டி.எம்., மையங்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளோம். தபால் அலுவலக ஏ.டி.எம்.,ஐ பயன்படுத்த,குறைந்த பட்ச சேமிப்பு தொகை, 5,000 ரூபாயாக உள்ளது. இதை, 100 ரூபாயாக குறைக்க முயற்சி நடக்கிறது. 'செல்வமகள் சேமிப்பு திட்டத்தில்', தமிழகத்தில், 6.12 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.இந்தியாவிலேயே தமிழகம் தான்முதலிடம்.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி