23ம் தேதி முதல்வராகிறார் ஜெயலலிதா? பதவியேற்பு விழாவுக்கான பணிகள் தீவிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2015

23ம் தேதி முதல்வராகிறார் ஜெயலலிதா? பதவியேற்பு விழாவுக்கான பணிகள் தீவிரம்


அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா வரும் 23ம் தேதி முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறஉள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டுஅரங்கம் இதற்கென தயாராகி வருகிறது.சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறை சென்று ஜாமீனில் வெளிவந்த பிறகு, அவர் பொதுநிகழ்ச்சிகளை தவிர்த்தே வந்தார்.
இந்நிலையில் இம்மாதம் 11ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கில் இருந்து அவரை விடுவித்ததை அடுத்து, நாளை கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதோடு, தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தவிருப்பதாகவும் அறிவித்திருப்பது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதலமைச்சராக ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லைஎன்ற போதிலும், அவர் முதலமைச்சராகப் பதவி ஏற்க இருப்பது உறுதி என்பதையே சூழ்நிலைகள் உணர்த்துகின்றன.

பதவி ஏற்பு நிகழ்ச்சி சென்னை பல்கலை கழகத்தின் நூற்றாண்டு கட்டிடத்தில் நடைபெறும் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது அங்கு பணிகள் முழு வீச்சில் இரவு பகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் 217 நாட்கள் கழித்து மீண்டும் தொண்டர்களை சந்திக்க வரும் ஜெயலலிதாவை வரவேற்க வித்தியாசமான பேனர்களோடு தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். அதோடு, பல மாதங்களாக சுணக்கம் கண்டிருந்த அரசுப் பணிகள் இனி துரிதமாக நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.மேலும், ஜெயலலிதா வசிக்கும் போயஸ்கார்டன் பகுதியில் இருந்து அவர் செல்லக்கூடிய ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை போன்ற சாலைகளை சீரமைக்கும் பணிகளும், அவற்றின் நடுவே பூச்செடிகளை நடும் பணிகளும் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி