ஆசிரியர்கள் திறனை அதிகரிக்க, 250 மில்லியன் அமெரிக்க டாலர் பீகார் அரசுக்கு கடன்வழங்க உலகவங்கி ஒப்புதல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2015

ஆசிரியர்கள் திறனை அதிகரிக்க, 250 மில்லியன் அமெரிக்க டாலர் பீகார் அரசுக்கு கடன்வழங்க உலகவங்கி ஒப்புதல்


பீகார் மாநிலத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் திறனை அதிகரிக்க, 250 மில்லியன் அமெரிக்க டாலர் அரசுக்கு கடன்வழங்க உலகவங்கி ஒப்புதல் வழங்கிஉள்ளது.தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பு மற்றும் திறமையை அதிகரிக்கும் விதமான,
இத்திட்டத்திற்கு அடுத்த 5 வருடங்களுக்கு உலகவங்கி 250 மில்லியன் அமெரிக்க டாலர் அரசுக்கு கடன்வழங்க ஒப்புதல் வழங்கிஉள்ளது. பீகார்அரசின் பள்ளி கல்வியை சீரமைக்கும் தொடர்பான இத்திட்டத்திற்கு உலகவங்கி வாரியத்தின் இயக்குநரகம் ஒப்புதல் அளித்துஉள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்த (குறிப்பாக தொடக்கப்பள்ளி அளவில்) இத்திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது.பீகாரில் கல்வியின் தரத்தை உயர்த்த, மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகளில் திறமையானஆசிரியர்கள் குறைபாடு என்பது மிகவும் தடையாக உள்ளது என்று காணப்படுகிறது.இதனை நிறைவு செய்வதற்கு இத்திட்டம் கொண்வரப்பட்டு உள்ளது.

பீகாரில் 2020-ம் ஆண்டுகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையானது 600,000, ஆக அதிகரிக்கும் என்று உலகவங்கி தெரிவித்து உள்ளது. மாநிலத்தில் ஒருவருடத்திற்கு5 ஆயிரத்திற்கு குறைவான புதிய ஆசிரியர்களுக்கு, பயிற்சி வழங்கும் திறனே உள்ளது. ஆனால் குறைந்தது பத்துமடங்கு அதிகமான ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி வழங்கவேண்டும் என்றநிலை உள்ளது என்று உலகவங்கி தெரிவித்துஉள்ளது. மாநிலத்தில் ஆசிரியர் கல்விக்கான மையங்கள் தேவை உள்ளது, திறமையான பயிற்சி, ஆசிரியர்களின் செயல்பாடு, பொறுப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்துதல் ஆகியவற்றை உயர்த்தவேண்டிய தேவையும் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகவங்கியின் இயக்குநர் ஒன்னொ ராகுல் பேசுகையில், “பீகாரில் குழந்தைகள் கல்விபயில்வதை உயர்த்தவே இந்த உத்தரவு, பீகாரில் தரம்வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க,வலுவான அமைப்பை உருவாக்குவது மிகவும் சிரமமானது,” பள்ளியில் ஆசிரியர்களுக்கு அவர்களுக்கு தேவையான திறனை, பயிற்சி, செயல்பாடு மற்றும் பொறுப்பு மூலம் இவற்றைப்பெற இத்திட்டமானது அமைத்துக் கொடுக்கும், என்று குறிப்பிட்டு உள்ளார். பீகாரில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் 450,000 ஆசிரியர்கள் இத்திட்டத்தில் பயன் அடைவார்கள் என்றும், 21.2 மில்லியன் பள்ளி குழந்தைகளும் கல்வி பெறுவதில் வளர்ச்சி பெறுவர் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி