பிளஸ் 2: பிற பாடங்களின் விடைத்தாள் நகல்களையும் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2015

பிளஸ் 2: பிற பாடங்களின் விடைத்தாள் நகல்களையும் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய முக்கியப் பாடங்களைத் தொடர்ந்து, கணினி அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கான பிளஸ் 2 விடைத்தாள் நகல்களையும் வெள்ளிக்கிழமை (மே 29) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 1 லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், முதல்கட்டமாக முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை scan.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.இப்போது மீதமுள்ள மொழிப்பாடம், வரலாறு, கணினி அறிவியல் போன்ற பிற பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களையும் அதே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்த பிறகு, விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால்,  ள்ஸ்ரீஹய்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஜூன் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். மேலும், விபரங்களுக்கு 8012594109, 8012594119 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி