எம்.பி.பி.எஸ்.: 33 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2015

எம்.பி.பி.எஸ்.: 33 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்


தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில்சேருவதற்கு சனிக்கிழமை வரை 33 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.நிறைவு செய்யப்பட்ட 9,763 விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர்ந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சென்னை பாரிமுனையில்உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.தமிழகம் முழுவதும் சனிக்கிழமை 403 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. மாநிலத்தில் இதுவரை மொத்தம் 33,527 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 9,763 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர்ந்துள்ளன.

தமிழக அரசின் சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org-இல் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி