4 நகராட்சி பள்ளிகள், 26 அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2015

4 நகராட்சி பள்ளிகள், 26 அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம்

காஞ்சிபுரம் நகரப் பகுதியில், நகராட்சி நிதி உதவியுடன் நகராட்சி நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், கழிப்பறை மற்றும் சத்துணவு மைய கட்டிடம் இல்லாத பள்ளிகளை தேர்வு செய்து, அப்பள்ளிகளில் கட்டிடங்கள் அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, கழிப்பறை கட்டிடம் அமைக்க 4 பள்ளிகளும், சத்துணவு மைய கட்டிடம்,சமையலறை கட்டிடம் அமைக்க தலா ஒரு பள்ளியும் தேர்வு செய்யப் பட்டுள்ளன. மேலும், பராமரிப்பு பணிகள் மற்றும் சுற்று சுவர் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள 20 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகளுக்காக 4 அங்கன்வாடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில், நகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூ.1.88 கோடி செலவில் மேற்கூறிய பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நகர மன்ற ஒப்புதல் பெற்ற பிறகு விரைவில் பணிகள் தொடங்கும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.சூரியஒளி மின்சாரத்தின் மூலம் நகராட்சி பள்ளிகளின் மின் தேவையை பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற் கட்டமாக நகராட்சி கட்டுப் பாட்டில்உள்ள 4 பள்ளிகளில் சோலார் போர்டு அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது.
இதற்காக, இராணி அண்ணாதுரை மேல் நிலைப்பள்ளி, சிஎஸ்எம் நடுநிலைப் பள்ளி, ஒலிமுகம்மது பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி, ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி