4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத்தேர்வு 8¾ லட்சம் பேர் எழுதுகிறார்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2015

4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத்தேர்வு 8¾ லட்சம் பேர் எழுதுகிறார்கள்

4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இன்று (ஞாயிற்றுக்கிழமை)எழுத்துத்தேர்வு நடக்கிறது. மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.
ஆய்வக உதவியாளர்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் காலியாக உள்ள 4,362 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவிப்பு செய்தனர். இந்த தேர்வு எழுத எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால் பட்டதாரிகள் தான் அதிக அளவில் விண்ணப்பித்துஇருந்தனர். மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்துத் தேர்வை அரசு தேர்வுகள் துறை நடத்த உள்ளது. சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி.பள்ளி உள்பட மொத்தம் 1900 மையங்களில் எழுத்துத்தேர்வு நடத்தப்பட உள்ளது. பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் சென்னையில் இருந்தபடி தேர்வுக்கான பணிகளைகவனித்து வருகிறார்.
30 பேர் கண்காணிக்கிறார்கள்
தேர்வுக்கான பணிகளை கண்காணிக்க தொடக்கப்பள்ளி இயக்குனர் ரெ.இளங்கோவன், பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர் இரா.பிச்சை மற்றும் இணை இயக்குனர்கள் 22 பேர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரக அதிகாரிகள் உள்பட மொத்தம் 30 பேர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தவிர அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையுடனும் தேர்வு நடக்க உள்ளது.
நேர்முக தேர்வு தேர்வு
இன்று காலை 10 மணி முதல் பகல் 12.30 மணிவரை நடக்கிறது. விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு பின்னர், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பட்டியலை அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளது. மாவட்ட அளவில் ரேங்க் பட்டியலில் உள்ளவர்களை அழைத்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.

2 comments:

  1. தேர்வு எப்படி இருந்தது நண்பர்களே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி