ஆய்வக உதவியாளர் பணி 5 லட்சம் பேர் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2015

ஆய்வக உதவியாளர் பணி 5 லட்சம் பேர் விண்ணப்பம்

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். நேற்று மாலை வரை, 5.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆய்வகங்களில் உதவியாளர் பணிக்கான, 4,362 பணியிடங்களை நிரப்ப, பள்ளிக்கல்வித் துறை சார்பில் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு. வரும் 31ம் தேதிசிறப்புத் தேர்வு நடக்கிறது. நேற்று வரை, 5.25 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். சென்னையில், 33 இடங்களே காலியாக உள்ளதால், சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக,அதிகாரிகள் தெரிவித்தனர்

10 comments:

  1. பயம்! பயம்! பயம்!

    ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. Nice stories, Sri. Why can't you post these stories as separate articles. It would be wonderful.

      Delete
    2. நன்றி நண்பரே...
      இங்கே கொடுக்கும் பதிவுகள் மிக சிறப்பான முறையில் அனைவரிடமும் சென்றடைவதாக கருதுகிறேன் அதனால் தான்....

      Delete
  2. Keshav sir pg 2nd list pati knjm clarify panunga ple.inda numku msg panunga sir nan call panren.9842891676

    ReplyDelete
  3. Praba sir yar solvathaiyum namba vendam. We pray the god for 2nd list more vacancy or for exam in near month.that's all.

    ReplyDelete
  4. sir lab assistant pass mark ethana edukkanum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி