ஆசிரியர்கள் நினைத்தால் முடியும்ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2015

ஆசிரியர்கள் நினைத்தால் முடியும்ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை.


ஆசிரியர்கள் நினைத்தால் அரசு பள்ளிகளில் தேர்ச்சியை அதிகரிக்க முடியும். ஒவ்வொரு ஆசிரியரும் அர்ப்பணிப்புடன் கல்வி பணியாற்ற வேண்டும்' என மதுரையில்நடந்த அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் ஆலோசனை கூட்டத்தில் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மதுரையில் பொதுத் தேர்வுகள் தேர்ச்சி முடிவு, பள்ளிகள் மீண்டும் துவங்கும்போது மேற்கொள்ளும் முன்னேற்பாடு தொடர்பாக நடந்த இக்கூட்டத்திற்கு, கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.அவர் பேசுகையில், "கல்வியாண்டு துவக்கம் முதலே பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சியை அதிகரிக்கும் வகையில் ஆசிரியர்கள் திட்டமிட வேண்டும். அரசு ஆசிரியர்கள் அலட்சியமாக இருக்க கூடாது. அர்ப்பணிப்பு இருந்தால் தான் பொதுத் தேர்வு தேர்ச்சியை அதிகரிக்க முடியும்" எனறார்.

'தலைமையாசிரியர் செய்ய வேண்டியவை' குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி பேசுகையில், "அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சியை அதிகரிக்க ஆசிரியர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். இதற்கு ஒவ்வொருவரின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு மிக அவசியம். மாணவர்களுக்கான அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் அனந்தராமன், அதிராமசுப்பு மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி