மொபைல் பயன்பாடு: ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2015

மொபைல் பயன்பாடு: ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை தடை


எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போனைபயன்படுத்தக் கூடாது என, தமிழக பள்ளிக் கல்வித்துறை கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

*.வரும் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் ஜூன் 1ம் தேதியே, எல்லா இலவச பொருட்களையும் மாணவர்களுக்கு வழங்கி விட வேண்டும். அன்றே பள்ளிகள் முழு அளவில் செயல்பட வேண்டும்.

*.ஆசிரியர்களுக்கான பணிக் கால அட்டவணையை கொடுப்பதுடன், அவர்கள் காலதாமதாக வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*.கட்டமைப்பு வசதி, குடிநீர் தொட்டி, கழிப்பறைகள், வகுப்பறைகள் மற்றும் பள்ளி மைதானம் உள்ளிட்ட எல்லா பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

*.எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது. இதை, தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

*.மாணவர்களுக்கு ஒழுக்கம், நற்பண்புகள் சார்ந்த கருத்துக்களை சொல்லித் தர வேண்டும். ஒழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்குவது தான், ஆசிரியரின் முழு முதற்கடமை.

*.இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு, தினமும் தமிழ் மற்றும் ஆங்கில மொழி வாசிப்பு பயிற்சி அளிப்பதுடன்,முதல் ஒரு மாதம் வாசிப்பது, எழுதுவது போன்ற பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்.

*.பாடம் சொல்லி கொடுப்பதுடன், விளையாட்டு, சமூக சேவை, கணித ஆய்வகம் உள்ளிட்ட செயல்பாடுகளிலும், மாணவர்களைஈடுபடுத்தி, அவர்களின் திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.

*.மாணவர்களின் வருகையை ஆசிரியர்கள் தினமும் கண்காணித்து, தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களை பற்றி தலைமை ஆசிரியருக்கு சொல்ல வேண்டும். அந்த மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*.பாட வேளையில் ஆசிரியர்கள் வகுப்பறையில் இல்லாத நிலைஇருக்கக் கூடாது. ஆசிரியர்கள் இல்லாமல் எந்த வகுப்பறையும் காலியாக இல்லாத நிலையை, தலைமை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.

*.தலைமை ஆசிரியர்கள் தினமும் குறைந்தது, இரண்டு பாட வேளைகளில் வகுப்புகளை மேற்பார்வை செய்து, அதற்கான பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி