சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2015

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 28) வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இருந்து இந்தத் தேர்வை 30 ஆயித்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
ஓர் நாள் தாமதமாக வியாழக்கிழமை வெளிவருகிறது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 2 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். சென்னை மண்டலத்தில் 1.7 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். முன்னதாக, சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 25) வெளியிடப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி