இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கவனத்துக்கு...விழிப்புணர்வு கட்டுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2015

இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கவனத்துக்கு...விழிப்புணர்வு கட்டுரை


வானிலையில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக பெட்ரோல் டேங்க் வெடிக்கக் கூடியஅபாயம் உள்ளது. பெட்ரோல் டேங்கை முழுவதுமாக நிரப்பும்போது, காற்று சுழற்சிக்குஇடமில்லாத காரணத்தால், பெட்ரோல் சூடாகி டேங்க் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு, 5பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

எனவே, பாதி டேங்க் மட்டுமே பெட்ரோல் நிரப்பவும்.- Indian Oil நிறுவனத்தின் அறிவிப்பு.

இணையவெளியில் பரபரவெனஉலவிய இந்தச் செய்தி உண்மையா?பெட்ரோல் நிறுவன உயரதிகாரி ஒருவரிடம் சந்தேகத்தை முன் வைத்தோம்...‘‘ஒவ்வொரு இரண்டு சக்கர வாகன தயாரிப்பின் போதும், பெட்ரோல் டாங்கின் கொள்ளளவு எவ்வளவு இருக்க வேண்டும், அதில் வேப்பர் ஸ்பேஸ் (பெட்ரோலுக்கு மேல் டாங்கினுள் இருக்க வேண்டிய காலியிடம்) எவ்வளவு இருக்க வேண்டும் என்று தீர்மானித்தே வடிவமைத்திருப்பார்கள். அதை வண்டி மேனுவலிலும் குறித்திருப்பார்கள்.அதுதான் சேஃப் ஃபில்லிங் லிமிட்.ஒரு உதாரணத்துக்கு சிறிய வண்டிஎன்றால் 2 லிட்டர் அளவு பெட்ரோல் நிரப்ப வேண்டும், பெரிய வண்டிஎன்றால் 5 லிட்டர் பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று ஒரு அளவீடு இருக்கும். அதன்படி நிரப்புவது நல்லது.பொதுவாகவே வேப்பர் ஸ்பேஸ் என்பது பத்து சதவிகிதம் இருக்க வேண்டும் என்பது முறை. அதுதான் நல்லது.பெட்ரோல் நிறுவனங்களில் பூமிக்கு அடியில் வைத்திருக்கும் பெரிய பெரிய டாங்குகளிலும் மேலே இடம் விட்டுதான் பெட்ரோல் நிரப்பி வைப்பார்கள்.முழுவதுமாக நிரப்ப மாட்டார்கள்.டூவீலரில் டாங்க் நிரம்பும் அளவுக்கு பெட்ரோல் நிரப்பினால், உடனடியாக வண்டியை ஓட்டிச் சென்றுவிட்டால் பிரச்னை இல்லை. பயன்பாட்டின்காரணமாக பெட்ரோலின் அளவு குறைந்து ஸ்பேஸ் உருவாகும். வழிய வழிய பெட்ரோல் நிரப்பிவிட்டு அப்படியே வெயிலில் வண்டியை நிறுத்திவிட்டு போனால் வெயிலின் வெப்பத்தால் அந்தப் பெட்ரோல் விரிவடையும்.பெட்ரோலின் அளவு (வால்யூம்) அதிகமாகும்.

அதனால் டேங்க் வழிய ஆரம்பிக்கும். டேங்கிலிருந்து பெட்ரோல் லீக் ஆகும். இதையே, 10 சதவிகித அளவு இடம்விட்டு நிரப்பினால், அதன் வால்யூம் அதிகரித்தாலும் அந்த காலியிடம் நிரம்பும்...அவ்வளவுதான்.ஒருவேளை பெட்ரோல் லீக் ஆகும் அந்த நேரத்தில் யாராவது அதன் அருகில் அமர்ந்து சிகரெட் பிடிக்கும் போது, அதன் பொறி பட்டோ, வேறு ஏதேனும் வகையில் நெருப்பு பட்டோ, தீப்பிடிக்க வாய்ப்பிருக்கிறதே தவிர, தானாகவேதீப்பிடிக்க வாய்ப்பில்லை.பெட்ரோல் டாங்க்கை முழுவதுமாக நிரப்பும் போது வெயிலின் காரணமாக அது வெடிக்கவும் வாய்ப்பில்லை.அப்படி எதுவும் நேர்ந்ததுமில்லை. இதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை... இப்படியான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை’’.சென்னை நியூ காலேஜ் வேதியியல் துறைத்தலைவர் முகமது ஆரீஃப் இதை இன்னும் தெளிவாக்குகிறார்... ‘‘இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டாங்க் நிரம்பி இருந்தால், இந்த வெயிலில் பெட்ரோல் டாங்க் வெடிப்பதற்கு வாய்ப்புண்டு என்று சொல்லப்படுவதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இந்த வெயிலினால் பெட்ரோல் டாங்க் எளிதில் சூடாகும்.அதனால் நீராவி வரும் என்பது உண்மைதான். அது டேங்கை பாதிக்கும் என்று சொல்ல முடியாது. இது போல வெயிலின் சூட்டினால் எல்லாம் பெட்ரோல் டாங்க் வெடிக்காது. டாங்கில் கொஞ்சம் இடைவெளி இருந்தாலே, விரிவடைதலுக்கு இடம் இருக்கும். அதனால், இரண்டு சக்கர வாகனங்களில் பெட்ரோல் நிரப்பும் போது பாதியளவுதான் நிரப்ப வேண்டும் என்பதில்லை. சிறிதளவு இடம் விட்டு நிரப்பினாலே போதும்...’’வெயிலில் பெட்ரோல் டாங்க் வெடிப்பதற்கு வாய்ப்புண்டு என்று சொல்லப்படுவதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரங்கள் எதுவும் இல்லை.

1 comment:

  1. பெட்ரோல் விற்கும் விலைக்கு டேங்க்கை புல் பன்னுவதா! ..எப்போதும் ரிசர்வ் தான்...!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி