ஷூ-விலிருந்து மின்சாரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2015

ஷூ-விலிருந்து மின்சாரம்


மாற்று எரிசக்திக்கான முயற்சிகள் பல்வேறு வகையிலும் தொடந்துகொண்டுதான் இருக்கிறது. பெரிய அளவிலான உற்பத்தி முதல் குறைந்த அளவிலான மின் தேவைகள் வரை மாற்று எரிசக்தியிலிருந்து பெறுவதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.
அந்த வகையில் காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் போன்றவை நாம் அறிந்ததுதான். அதுபோலவே மனித உடல் இயக்கங்களிலிருந்துகூட குறைந்த அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்கிறது தொழில்நுட்ப உலகம்.நாம் நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தைக் கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்து கொள்ள முடியும். இதற்கு ஏற்ப ஷூக்கள் உருவாக்கபட்டுள்ளன. இதை அணிந்து கொண்டு நடந்தால் இதிலிருந்து மின்சாரம் உற்பத்தியாகி ஷூ-வோடு இணைக்கப்பட்டுள்ள பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.இந்த மின்சாரத்தைக் கொண்டு ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் கேமரா போன்ற குறைந்த மின் பயன்பாடுகள் கொண்ட சாதனங்களை இயக்கலாம். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கையோடு சார்ஜர் அல்லது பவர் பேங்கை தூக்கிக் கொண்டு அலையத் தேவையில்லை.இந்த ஷூ வை மாட்டிக்கொண்டு நடந்தால் போதும். உடனடி மின்சார தேவைக்கு ஓடவும் செய்யலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி