விண்ணப்பம் விநியோகம் தொடங்கவில்லை : பொதுமாறுதல் கலந்தாய்வு தாமதம் பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2015

விண்ணப்பம் விநியோகம் தொடங்கவில்லை : பொதுமாறுதல் கலந்தாய்வு தாமதம் பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்


தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வுதொடர்பான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியாகும். மே மாதம் கலந்தாய்வுக்கான கால அட்டவணை வகுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரைஅறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.
இதனால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கலந்தாய்வு முன்கூட்டியே நடைபெற்றால் ஆசிரியர்கள் இடம் மாறி செல்கின்ற பகுதிகளில் கல்வியாண்டு தொடக்கத்திலேயே ஒரே பள்ளியில் பணிபுரிவதுடன் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க செய்ய முடியும் என்றஎதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் இதுவரை விண்ணப்ப விநியோகமே நடைபெறாததுடன் காலி பணியிடங்களை மறைத்து பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திவிட்டு மறைமுகமாக இதர ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் கல்வித்துறையால் மேற்கொள்ளப்படுவது வழக்கம். கடந்த ஆண்டும் இதுபோன்று ஆசிரியர் பணி நியமனங்கள் அதிக அளவு நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக ஆசிரியர் இயக்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு தொடர்பான பணிகளை உடனே தொடங்க வேண்டும். இடமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பம் பெற வேண்டும். ஒளிவு மறைவற்ற முறையில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் பணி ஒட்டுமொத்தகாலி இடங்கள், விபரங்களை கல்வித்துறை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மாவட்ட வாரியாக, பாட வாரியாக இணையதளத்திலும் காலியிட விபரங்களை வெளியிட வேண்டும்’ என்றார்.

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Please any one tell me, there is any chance to attend the transfer counselling September 26, 2014 appointed candidates through TET

    ReplyDelete
    Replies
    1. yes you have a chance ... further info you see 10 days before kalvisethi news

      Delete
  3. When can we expect application issue for general counselling this year?

    ReplyDelete
  4. Sir every year we are, the teachers cheated in the name of transfer .why don't you create the pages to share the mutual expected or searching teachers information for all over to tamilnadu . By this possible to avoid the unnecessary expenses. Please consider.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி