எஸ்.ஐ., தேர்வில் முறைகேடு: டி.ஐ.ஜி., விசாரிக்க கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2015

எஸ்.ஐ., தேர்வில் முறைகேடு: டி.ஐ.ஜி., விசாரிக்க கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த, போலீஸ் எஸ்.ஐ., தேர்வில், இருவருக்கு மட்டும், தனி அறையை கொடுத்து, தேர்வெழுத வைத்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, டி.ஐ.ஜி., விசாரணை நடத்த வேண்டும் என, தேர்வர்கள், கோரிக்கை விடுத்து உள்ளனர்.காவல் துறையில், காலியாக உள்ள, 1,078 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப, கடந்த,23, 24 தேதிகளில், எழுத்துத் தேர்வு நடந்தது
.80 சதவீதம் பேர்...:மாநிலம் முழுவதும், ஐ.ஜி., கமிஷனர், டி.ஐ.ஜி., - எஸ்.பி., ஆகியோரின் மேற்பார்வையில், 114 மையங்களில் தேர்வு நடந்தது. இதில், 80 சதவீதம் பேர் பங்கேற்றனர். பொதுப்பிரிவினருக்கு, ஒரு கட்டமாகவும், போலீசில் பணியாற்றுவோர், அமைச்சுப் பணியாளரின் வாரிசுதாரர்களுக்கு (94 பணியிடங்கள்)மறு கட்டமாக வும் தேர்வு நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி மையத்தில், தேர்வு நடந்தது. இதில், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இருவருக்கு 'கவனிப்பு?
'இதில், நாமக்கல் மாவட்ட எஸ்.பி.,யிடம் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவரின் டிரைவர்வாசுதேவன் (தேர்வு எண்: 6150001), மற்றொரு போலீஸ் சத்தியமூர்த்தி (6150002) ஆகியோர், தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்துள்ளது. தேர்வில் வெற்றி பெற, உயர் அதிகாரி கள் சிலரை, அவர்கள், 'பலமாக'கவனித்துள்ள தாகவும், 170 மதிப்பெண்ணில், அவர்கள், 160 மதிப்பெண் வரை பெற வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகி உள்ளது.
கோரிக்கை:
இருவர் மட்டுமே தனியாக அமர்ந்து, தேர்வு எழுதிய விவகாரம், நாமக்கல் போலீசாரிடையே, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுடைய விடைத்தாளை, டி.ஐ.ஜி., ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றால், பெரிய அளவிலான போட்டி ஏதுமில்லாமல், நேரடியாக, எஸ்.ஐ., பணியில் சேர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முறைகேடு நடந்திருந்தால், தேர்வு எழுதிய அனைவரும் பாதிப்புக்குள்ளாக நேரிடும். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என, மாவட்ட போலீசாரே வலியுறுத்துகின்றனர்.
எஸ்.பி., மழுப்பல் பதில்:
நாமக்கல் மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் கூறியதாவது: ஒரு அறைக்கு, 20 பேர் என்ற வகையில், தேர்வு எழுதுவோரை அமர வைத்தோம். கடைசியாக, 22 பேர் என வந்ததால், இருவர் மட்டும் தனியாக உட்கார வைக்கப்பட்டனர். அவர்களுக்கும், தனியாக கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டிருந்தனர். டிரைவர் யாரும் கிடையாது. வாசுதேவன், சத்தியமூர்த்தி யார் என்றே எனக்கு தெரியாது. ஒருவருக்கும், மற்றொருவருக்கும், கேள்வித்தாள் வேறுபடும். தேவையில்லாத தகவல்களை யாராவது கூறலாம். பணம் பெற்றுக்கொண்டு, தேர்வு எழுத வைத்தோம் என கூறுவது, தவறான தகவல். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி