அனைத்து மின்சார ரயில்களிலும் செல்போன் மூலம் டிக்கெட்: ஓரிரு மாதங்களில் அமல்படுத்தப்படும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2015

அனைத்து மின்சார ரயில்களிலும் செல்போன் மூலம் டிக்கெட்: ஓரிரு மாதங்களில் அமல்படுத்தப்படும்

அனைத்து மின்சார ரயில்களிலும் செல்போன் மூலம் டிக்கெட் பெறும் வசதி ஓரிருமாதங்களில் அமல்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.சென்னை எழும்பூர் – தாம்பரம் புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கான செல்போன் ஆப் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இதற்காக ‘யுடிஎஸ்’ எனப்படும் செல்போன் அப்ளிகேஷனை ‘கூகிள் பிளே’ அல்லது ‘விண்டோஸ் ஸ்டோர்’ ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி குறுகிய தூர மின்சார ரயில் பயணத்துக்கு வேண்டிய டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு பயணம் செய்யலாம்.சென்னை எழும்பூர் - தாம்பரம் மார்க்கத்தில் இத்திட்டம் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், வேளச்சேரி செல்லும் மின்சார ரயில்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்படவில்லை.
இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தெற்குரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘செல்போன் மூலம் டிக்கெட் பெறும் வசதி சென்னை எழும்பூர் –தாம்பரம் இடையே மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை அனைத்து மின்சார ரயில்களிலும் ஒரிரு மாதங்களுக்குள் விரிவுபடுத்தப்படும்” என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி