எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற நாளை கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2015

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற நாளை கடைசி

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை (மே 28) கடைசி நாளாகும்.நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குச் சென்று சேர வேண்டும்
.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து மே 11-ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 19 அரசுமருத்துவக் கல்லூரிகளிலும், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.நாளை கடைசி: விண்ணப்பங்களைப் பெறுவதற்கு மே 28-ஆம் தேதி கடைசி நாளாகும். சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org -இல் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள் தாங்கள் அனுப்பிய விண்ணப்பம் சென்று சேர்ந்ததா என்பதை உறுதி கொள்வதற்கான இணைப்பு (link) சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மொத்தம் 590 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 35 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நிறைவு செய்யப்பட்ட 17,843 விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குச் சென்று சேர்ந்துள்ளன என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி