மாணவர்களை தனியார் பள்ளியில் அரசே சேர்ப்பதா? - புதிய திட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2015

மாணவர்களை தனியார் பள்ளியில் அரசே சேர்ப்பதா? - புதிய திட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி


ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் படித்து 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர்கள், அவர்களது மாவட்டத்தில் உள்ளதனியார் பள்ளிகளில் அரசு உதவியுடன் கல்வி பயிலும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கையைத் தகர்த்துள்ளது.இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை குறித்து விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த 3 மாணவர்கள் , 3 மாணவியர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட ,சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 2 மாணவர்கள், 2 மாணவியர் ஆக மொத்தம் 10 பேரைத் தேர்வு செய்து, அவர்கள் விரும்பும் தமிழகத்திலுள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் 11-ம்வகுப்பில் மேல்நிலைக்கல்வி பெற ஏதுவாக அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் உதவிபெற விரும்பும் மாணவ, மாணவியரின் பெற்றோரது ஆண்டுவருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவருக்கு உயர்ந்த பட்சமாக ஆண்டுக்கு ரூ. 28 ஆயிரத்துக்கு மிகாமல் நிதியுதவி வழங்கப்படும்.

இது குறித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பிற்படுத்தப்போட்டோரின் கல்வியை ஊக்குவிக்கும் முயற்சிதான் இது. எனினும், அரசு பள்ளிகள் சிறப்பாக இல்லை என அரசே ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதைப் போல் உள்ளது என்கின்றனர் அரசு பள்ளி ஆர்வலர்கள்.கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் இப்போது மாணவர் சேர்க்கை போதிய அளவுக்கு இல்லை. இதனால்தான் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அரசு அறிமுகப்படுத்தியது. பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், ஆசிரியர்களும் வீடு,வீடாகச் சென்று மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.ஆசிரியர்களின் முயற்சி, மாணவரின் கடின உழைப்பால் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் ஜொலிக்கின்றனர்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற வேண்டும் என்று தான் அரசு பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து `எலைட்’ போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் அரசு பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களை, அரசே தனியார் சேர்த்தால், அரசு பள்ளிகளின் நிலையை அரசு புரிந்துள்ள விதத்தை என்னவென்று சொல்ல முடியும்? இந்த மாணவர்களுக்கு அரசு பள்ளிகளிலேயே வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து, தரமான கல்வியை வழங்கலாமே?”என்றார்.பிற்படுத்தப்பட்டோரின் கல்விக்கு வழிவக்கும் அரசை பாராட்டினாலும், இது அரசு பள்ளிகளை அலட்சியப்படுத்தும் போக்குதான் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி