சப் - இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு சட்டம், காவல் துறை கேள்விகள் அதிகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2015

சப் - இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு சட்டம், காவல் துறை கேள்விகள் அதிகம்


தமிழகம் முழுவதும், நேற்று நடந்த எஸ்.ஐ., தேர்வில், பெரும்பாலானகேள்விகள்,சட்டம், காவல் துறை சம்பந்தப்பட்டதாக இருந்தன.தமிழக காவல் துறையில் காலியாக உள்ள, 1,078 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, பொது ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழகம் முழுவதும், 114 மையங்களில், நேற்று முன்தினம் தேர்வு நடந்தது. 8௫ சதவீதத்திற்கும்மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று, 20 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில், காவல் துறையினர், அமைச்சு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது. அதில், 13,059 பேர் தேர்வு எழுதினர். 170 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அதில், 1 முதல் 30 வரை பொது அறிவு கேள்விகள், 31 முதல் 50 வரை உளவியல் கேள்விகள், 50 முதல் 170 வரை சட்டம் மற்றும் காவல்துறை சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.

தேர்வு எழுதிய போலீசார் ஒருவர் கூறியதாவது:பொதுஅறிவு கேள்வி அதிகம் கேட்கப்படும் என நினைத்து, முன் தயாரிப்பு செய்திருந்தோம். ஆனால், பெரும்பாலான கேள்விகள், நாங்கள் பணி புரியும் காவல்துறை, சட்டம் சம்பந்தப்பட்டதாக இருந்தன. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி