ஓய்வுக்கு முந்தைய நாள் பணியிடை நீக்கம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு - ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2015

ஓய்வுக்கு முந்தைய நாள் பணியிடை நீக்கம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு - ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்


பணியிடை நீக்கம் தண்டனை அல்ல. ஓய்வுக்கு ஒரு நாளுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யக் கூடாது என எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு குடிமைப்பொருள் வாணிபக் கழகத்தில் பணி புரிந்தவர் முருகன். இவர்ஏப்.1-ம் தேதி ஓய்வுபெற இருந்தார். இவரை மார்ச் 30-ம் தேதி பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு:

பணியிடை நீக்கம் என்பது தண்டனையல்ல. அது ஒரு இடைக்கால நடவ டிக்கை மட்டுமே.மேலும் ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் ஒருவரை பணியிடை நீக்கம் செய்யக்கூடாதுஎன எந்தச் சட்டத்திலும் கூறப்படவில்லை. மனுதாரரின் மனுவை அனு மதித்தால், பணியிலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் ஊழல் செய்து விட்டு பணியிடை நீக்கம்செய்ய முடியாது என பலர் நீதிமன்றத் துக்கு வருவர். மேலும், பணியிடை நீக்கம் செய்ய மண்டல மேலா ளருக்கு அதிகாரம் உண்டு. மனுதாரருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு ள்ளது. அவற்றின் மீது ஒரு ஆண்டுக்குள் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி