குடியரசு தலைவர் மாளிகை முழுவதும் வைஃபை வசதி அறிமுகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2015

குடியரசு தலைவர் மாளிகை முழுவதும் வைஃபை வசதி அறிமுகம்.


தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை அமைந்துள்ள எஸ்டேட் பகுதி முழுவதிலும் இன்று முதல் வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.தில்லியில் ராஷ்ட்ரபதி பவன் வளாகத்தில் 330 ஏக்கர்கள் பரப்பளவில் எஸ்டேட் பகுதி உள்ளது.
இந்த பகுதிகள் முழுவதும் இன்று முதல் வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இந்த வைஃபை வசதியின் மூலம் அப்பகுதியில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் தடையில்லா இணையதள வசதியை பெறுவார்கள். இந்த இணையதள வசதிக்கு குறைந்த கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தொடக்கத்தில் 24 வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளும், 30 வைஃபை அக்ஸஸ் பாயிண்டுகளும் அமைக்கப்படவுள்ளது. இந்த இணையதள சேவையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி