TET 2015: இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு: பள்ளிக்கல்வி அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2015

TET 2015: இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு: பள்ளிக்கல்வி அமைச்சர்


தமிழக அமைச்சர் கே.சி.வீரமணி இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வு மூலமாக அரசுப் பள்ளிகளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஆண்டு தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று ஆசிரியர் பயிற்சிமுடித்தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், சர்வதேச அருங்காட்சியக தினத்தை ஒட்டி சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இன்று சிறப்பு கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் வீரமணி, ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த தகுதித் தேர்வு மூலம் ஏறத்தாழ 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படலாம். தகுதித் தேர்வு தேர்ச்சியில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட5 சதவீத மதிப்பெண் தளர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் வீரமணி கூறினார்.

46 comments:

  1. 2015-2016 vacancies 3000 - 4000 then 2013 - 2014 and 2014-2015 vacancies how much...please any one reply

    ReplyDelete
    Replies
    1. PG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
      உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

      முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்!
      அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு இப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்…. முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
      முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
      சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம் .ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும் தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
      இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 55 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
      தற்போது....
      அலகு 6 -சங்கம்-
      அலகு 7-காப்பியங்கள்
      , நினைவுக்குறிப்புகள், தேர்வு - தேர்வுக்கு பிந்தய பின்னூட்டம் ஆகியவை நிறைவுற்றுள்ளது


      .21.05.2015 முதல் அலகு 8 க்கான தேர்வு-1 மற்றும் தேர்வுக்கு பிந்தய பின்னூட்டம் நடைபெறும்
      நீங்களும் இணையுங்கள் .கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க. மாதிரி வினாத்தாள் வேண்டுவோர் தொடர்பு கொள்க….
      வெற்றி- 7598299935

      Delete
  2. என்னா தலைவரே சொல்றீங்க 3000,4000 vacant தான் இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. ADW posting poratam..contact:MADHAN: 9841104578

      Delete
  3. Talaivarae...mudalla case-a mudinga!!!!!!!!!

    ReplyDelete
  4. Lot of vacancies is there but 4000 will be put

    ReplyDelete
  5. டெட் நடக்குமா? நடக்காதா?

    ReplyDelete
  6. டெட் நடக்குமா? நடக்காதா?

    ReplyDelete
  7. rampa mukkiyam alreay pass panavanga enga poga tet date sonna csae than podnum

    ReplyDelete
  8. 23 annaikku theriyum veeramani ministera illayannu
    SAIRAM

    ReplyDelete
  9. Last appointment order la 2014-15 vacant kana posting nu pottu iruku. Vacancy um kuraivaga than ulladhu.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Ena sir soldrenga 2014 2015 vacancy potacha

    ReplyDelete
  12. Ena sir soldrenga 2014 2015 vacancy potacha

    ReplyDelete
  13. Replies
    1. Sir August 2013 tet mulama potta postings ellame 2012-13kana vacancy sir.so innum 2013-14,2014-15 vacant irukume?pg vacancy matumdhan2014-15 v araikum filled. So minimum Aug 2015 tet mulama 6500 bt,1200 Sgt podalam maybe

      Delete
    2. Ennoda appointment order la appadi dhan iruku. Dharmapuri dist last month 30 th padi school education dept la total a 57 vacant dhan iruku.

      Delete
  14. Next political game is started by Politician, TAMILNADU.

    Our education department people(ministers, Secretary, Directors) should get training from NCERT i.e. rules and regulation of education system. People earn money themselves thorough appointment. Already these people ring the death knell to the education system of Tamilnadu.
    (Political and Aristocratic policy : As long as you are poor and illiterate, you depend on aristocratic people)

    ReplyDelete
  15. ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,

    வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...

    தனக்கு வந்த அழைப்புக்கு பதிலளித்த அவர் விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

    மருத்துவரைக்
    கண்டதும் கோபமாக,
    "என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்திருந்தும்,

    ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்.
    உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?"
    என்று கதறினார்.

    மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை,
    எனக்கு அழைப்பு
    வந்ததும் என்னால்
    இயன்ற அளவு விரைந்து வந்தேன்,,,
    சற்று பொறுமையாக இருங்கள்"
    என்று கூறினார்.

    "பொறுமையாக இருக்கவா?"
    அந்த தந்தை மேலும்
    ஆத்திரமடைந்தார்,

    உங்கள் மகன்
    இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால்
    நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா?

    மருத்துவரின் தாமதத்தால்
    "உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்"
    என்று கொந்தளித்தார்.

    மருத்துவர் சிரித்த முகத்துடன்,
    "எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.

    "கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது" தந்தை முனுமுனுத்தார்.

    அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது...
    மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார், "உங்கள் மகன் பிழைத்துவிட்டார்"
    என்று சொன்னபடி,

    "மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.

    சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம்,
    "அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா?
    என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட நேரமில்லையா?"
    என்று நொந்துகொண்டார் தந்தை.

    அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, "மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்,

    இன்று உங்கள் மகனுக்காக
    அறுவைசிகிச்சை
    செய்ய வேண்டும்
    என்று அழைத்த நேரம்,

    அவர் மகனை அடக்கம்
    செய்யும் சடங்கில்
    இருந்தார்,
    அழைத்தவுடன் அந்த வேலையை
    ஒத்திவைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார்.

    இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்"
    என்று கூறினாள்.

    நீதி:
    எவரின் மனநிலையையும்
    நாமே தீர்மானிக்கக் கூடாது,

    அவர்கள்
    வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப்
    பற்றியும்
    நாம் அறிந்திருக்காதவரை!!

    ReplyDelete
  16. எப்படி டெட் நடத்துறீங்கனு பாப்போம்.பாஸ் செய்தவர்கள் போராடுவோம் முன்னுரிமை கேட்டு

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. hello sir. ungaluku weightage varalana pinnadi varavanga enna panna mudium, marks kammina score improve pannunga, 90 marks mattume velaiku urimai illa.

      Delete
    3. You r correct RSK sir...... At least adutha exam la neraiya marks score pannunga.... Aduthavanga thalaila kai vaikathinga

      Delete
  17. அருமையான நீதிக்கதை.வேட்டை மன்னனுக்கு நன்றி

    ReplyDelete
  18. Very superb story brother.....

    ReplyDelete
  19. Very superb story brother.....

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Sir prabhu ninga enna major subject solla mudiyuma. Because maths and tamil only above 90marks candidate are there. Then exam vaikama enna panna mudiyum

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. Sir. Tet pass Panna ellarukum velai kudukanaum nu rule illai. Unga weitage ku epo job varutho apo than velai. Illana weitage athigamaakura vaziya paaruga. So court la case potaalum stay lam vaanga mudiyaathu. onnum Pana mudiyaathu. Ore vazi, Unga weitage epo top la varutho apo than velai.... Athuvarai kaathiruga or marubadiyum tet eluthunga. Becoz +2,degree lam marubadi padika mudiyaathu

    ReplyDelete
  24. Sir. Tet pass Panna ellarukum velai kudukanaum nu rule illai. Unga weitage ku epo job varutho apo than velai. Illana weitage athigamaakura vaziya paaruga. So court la case potaalum stay lam vaanga mudiyaathu. onnum Pana mudiyaathu. Ore vazi, Unga weitage epo top la varutho apo than velai.... Athuvarai kaathiruga or marubadiyum tet eluthunga. Becoz +2,degree lam marubadi padika mudiyaathu

    ReplyDelete
  25. Sir. Tet pass Panna ellarukum velai kudukanaum nu rule illai. Unga weitage ku epo job varutho apo than velai. Illana weitage athigamaakura vaziya paaruga. So court la case potaalum stay lam vaanga mudiyaathu. onnum Pana mudiyaathu. Ore vazi, Unga weitage epo top la varutho apo than velai.... Athuvarai kaathiruga or marubadiyum tet eluthunga. Becoz +2,degree lam marubadi padika mudiyaathu

    ReplyDelete
  26. Sir. Tet pass Panna ellarukum velai kudukanaum nu rule illai. Unga weitage ku epo job varutho apo than velai. Illana weitage athigamaakura vaziya paaruga. So court la case potaalum stay lam vaanga mudiyaathu. onnum Pana mudiyaathu. Ore vazi, Unga weitage epo top la varutho apo than velai.... Athuvarai kaathiruga or marubadiyum tet eluthunga. Becoz +2,degree lam marubadi padika mudiyaathu

    ReplyDelete
  27. hai everybody tetla pass pannanavanga nilaimaiya pathi govt think pannavae ma2thu yenna pannalam friends,,,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி