TNTET: மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும்:ஜி.கே.வாசன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2015

TNTET: மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும்:ஜி.கே.வாசன்



த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்தியா முழுவதும் 8.1 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமலும் அல்லது பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். மேலும் பள்ளிகளில்சுமார் 5 லட்சத்து 8 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டாயமாக கல்வி பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு 2009–ம் ஆண்டில் கல்வி உரிமை சட்டத்தை மத்தியஅரசு கொண்டுவந்தது. அதன் அடிப்படையில் அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த சட்டத்தைநடைமுறைப்படுத்த 1 லட்சத்து 71 ஆயிரம் கோடி நிதி தேவை எனக் கணக்கிட்டுஇச்சட்டத்தை சர்வசிக்ச அபியான் எனும் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்ததொடங்கியது.சர்வசிக்ச அபியான் திட்டத்தின் அடிப்படையில் 2010–ம் ஆண்டு முதல் தமிழகத்தில்மட்டும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இந்த ஆசிரியர்கள் அனைவரும் ஐந்தாண்டுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வான ‘‘டெட்’’ எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என மத்தியஅரசின் மனித வள மேம்பாட்டு துறை ஆணை பிறப்பித்தது.ஐந்தாண்டுகளில் 10 முறை இந்த டெட் தேர்வை எழுதலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தை பெறுத்த வரை கடந்த 2013–ம் ஆண்டுஒரு முறை மட்டுமே டெட் தேர்வு நடந்தது. 2011–ம் ஆண்டு பணியில் சேர்ந்தஆசிரியர்கள் அனைவருக்கும் இன்னும் ஒரு ஆண்டே தகுதித் தேர்வை நடத்திட வேண்டும்என்று ஆசிரியர்கள் அனைவரும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.அவ்வாறு இந்த தேர்வை நடத்தாமல் இருந்தால் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயச்சூழல் ஏற்படும்.

அதனால் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை, எளியமாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும்.எனவே தமிழக அரசு ஏழை, எளிய மாணவர்களின் கல்வியைக் கருத்தில் கொண்டும்,ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்றும் தகுதித் தேர்வை உடனே அறிவித்தது நடத்தவேண்டும்.சர்வசிக்ச அபியான் திட்டம் தங்கு, தடையின்றி தொடரவும், மாணவர்கள் தொடர்ந்துகல்வி பயிலவும், ஆசிரியர்கள் நலன் காக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாகநடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

1 comment:

  1. Teachers Recruitment Board
    College Road, Chennai-600006


    DIRECT RECRUITMENT OF B.T. ASSISTANT 2012-2013






    PROVISIONAL SELECTION LIST URDU LANGUAGE AND URDU MEDIUM SUBJECTS.

    DIRECTORATE OF SCHOOL EDUCATION DEPARTMENT

    Board has already released the provisional result for the direct recruitment of B.T Assistant 2012-2013 on 10.08.2014, 26.08.2014, 27.08.2014 and 14.10.2014. In continuation of the same, Board now releases the provisional selection first list for the minority urdu medium vacancies (language & subjects) as requested by the Director of School Education vide letter No. RC.No.101154/C2/E3/2014, Dt.12.01.2015 this is subject to formalisation by the Director of School Education following due process.

    This is provisional selection list only and appointment order to the candidates will be issued separately by the user department upon verification of their original certificates, degree, etc.

    Also the list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions pending before the Hon’ble High Court of Madras and Madurai.

    The appointment order for the selected candidates after satisfying all conditions will be issued by the concerned user Department separately after due process.

    “Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement”.


    Dated: 21-05-2015

    Member Secretary
    Click Here Urdu Language List

    Home

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி