உதவி பேராசிரியர்கள் 1,080 பேர் தவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2015

உதவி பேராசிரியர்கள் 1,080 பேர் தவிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பணி நியமனம் செய்ய, 1,080 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகும், பணி நியமன உத்தரவு வழங்காததால், அவர்கள் தவித்து வருகின்றனர்.
காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆறு மாதங்களுக்கு முன் தேர்வுப் பணி நடந்தது. 5,400 பேரில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 1,080 பேர், உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டனர். இப்பணி முடிந்து, ஆறு மாதங்களாகியும், பணி நியமனத்திற்கான உத்தரவுகள் வழங்காததால், தேர்வு பெற்றவர்கள் தவித்து வருகின்றனர்.இவர்களில் சிலர் கூறியதாவது:தேர்வு பெற்றவர்களில் பலர், தனியார் கல்லுாரியில்பணியாற்றி வந்தனர்.

இவர்களை, கல்லுாரி நிர்வாகம், வேலையில் இருந்து நீக்கிவிட்டதால், வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். அரசு கல்லுாரிகளில், தொகுப்பூதிய அடிப்படையில் வேலை பார்த்து வந்தவர்கள், நிரந்தரப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதும், வேலையைவிட்டுவிட்டனர். பணி நியமன உத்தரவு வழங்குவது, கால தாமதமாகி வருவதால், இவர்களும் தவித்து வருகின்றனர். நடப்பாண்டில், கல்லுாரிகள் திறக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், பணி நியமன உத்தரவுகளை, உடனே வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்

16 comments:

  1. Kathirundhu Kathirundhu kaalangal pogudhadi. .................

    ReplyDelete
  2. Selection list vanthu one year agium, order varala, evlo NAL wait panarathu?

    ReplyDelete
    Replies
    1. அரசிடம் போதுமான நிதி இல்லாத காரணத்தால் காலதாமதம் ஆகலாம்

      Delete
    2. அரசிடம் போதுமான நிதி இல்லாத காரணத்தால் காலதாமதம் ஆகலாம்

      Delete
    3. அரசிடம் போதுமான நிதி இல்லாத காரணத்தால் காலதாமதம் ஆகலாம்

      Delete
  3. Selection list vanthu one year agium, order varala, evlo NAL wait panarathu?

    ReplyDelete
  4. Saami.. Order varathukkulla enakku 58 vayasu ayidum. Em pullakku 58 vayasu akaruthukkulla en velaiya avalukku kodunga saamiyoi...

    ReplyDelete
  5. நண்பர்களே,ஆதி திராவிடர் பணி நியமனத்தின் வழக்கு, மீதி 30% நிரப்புவது பற்றி ஏதேனும் தகவல் உண்டா?


    ஆதி திராவிடர் பணி நியமனத்தின் வழக்கு எப்போது விசாரணைக்கு வருகிறது
    மதுரை நீதிமன்ற தகவல் ஏதேனும் உண்டா?

    ReplyDelete
  6. When will the asst proffessors get appointment?

    ReplyDelete
  7. When will the asst proffessors get appointment?

    ReplyDelete
  8. When will the asst proffessors get appointment?

    ReplyDelete
  9. what happened to net/slet holders case? will this affect appointment process?

    ReplyDelete
  10. Net set must be made compulsory as per central government norms and supreme court order

    ReplyDelete
  11. when will people get order for trb

    ReplyDelete
  12. Shd we join in some other college. How long to wait

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி