அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள 214 எம்பிபிஎஸ், பிடிஎஸ்இடங்கள்: கடைசி நாள் கலந்தாய்வு இன்று நடக்கிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2015

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள 214 எம்பிபிஎஸ், பிடிஎஸ்இடங்கள்: கடைசி நாள் கலந்தாய்வு இன்று நடக்கிறது

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள 214 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான கடைசி நாள் கலந்தாய்வு இன்று நடக்கிறது.எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 6-ம் நாள் கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்குமாறு காத்திருப்போர் பட்டியில் இருப்பவர்கள் உட்பட1038 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டன.

962 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர்.கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 501 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 139 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 20 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 660 இடங்கள் நிரப்பப்பட்டன. 301 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இறுதி நாள் கலந்தாய்வு இன்று நடக்கிறது. கடந்த 6 நாட்களாக நடந்த கலந்தாய்வில் பழைய மாணவர்கள் 470 பேர் கல்லூரிகளில் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

6-ம் நாள் கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 84 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 114 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 16 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 8 எம்பிபிஎஸ் இடங்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 5 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் அண்ணாசாலை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 2 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி