பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 23 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்துச் சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2015

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 23 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்துச் சாதனை

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10மணியளவில் வெளியிடப்பட்டது.சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக இயக்குநர் அலுவலகத்தில், பொறியியல் படிப்புகளில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2015-16 பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே6-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன.

மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 515 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 பேர் மட்டுமே சமர்ப்பித்தனர். இவர்களில் மாணவர்கள் 95,300 பேர், மாணவிகள் 58,938 பேர் ஆவர்.விண்ணப்பித்தவர்களில், 23 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தரவரிசைப் பட்டியலில் கோவையைச் சேர்ந்த கீர்த்திபாலன் என்ற மாணவி முதலிடத்தை பெற்றுள்ளார்.தரவரிசைப் பட்டியலை www.annauniv.edu என்ற இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி