ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் சேர ஜூலை 7-க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2015

ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் சேர ஜூலை 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர் விடுதிகளில் நடப்பு ஆண்டில் தங்கி படிக்க மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாணவ, மாணவியர்விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்கு உணவு மற்றும் இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டில் புதிதாக மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.விடுதியில் சேர விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்டோர் மற்றும் இதர வகுப்பினைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.தகுதியுள்ள மாணவ, மாணவியர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 7-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.

இலங்கைத் தமிழருக்கு இடம்

இவ்விடுதிகளில் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் தங்கி கல்வி பயில ஏதுவாக ஒவ்வொரு விடுதிகளிலும் கூடுதலாக 5 இடங்களை ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதை அந்த மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி