ஐ.ஐ.டி.,க்கு எதில் படிக்க ஆர்வம்? : நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2015

ஐ.ஐ.டி.,க்கு எதில் படிக்க ஆர்வம்? : நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

இந்திய தொழில்கல்வி நிறுவனம் என அழைக்கப்படும், ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான,ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட நிலையில், மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்ய, நாளை முதல், ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்;
கவுன்சிலிங், ஜூலை, 1ல் துவங்குகிறது.உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.ஐ.டி., ஆகியவற்றில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த, 451 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்; நாளை முதல், கவுன்சிலிங் நடவடிக்கை துவங்குகிறது. கடந்த ஆண்டு வரை மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சி.எஸ்.ஏ.பி., என்ற, மத்திய இட வழங்கல் வாரியம் நடத்தியது.இந்த ஆண்டு முதல், மத்திய அரசின், இணைந்த இட வழங்கல் ஆணையமான, 'ஜே.ஓ.எஸ்.ஏ.ஏ., - ஜாய்ன்ட் சீட் அலொக்கேஷன் அதாரிட்டி' நடத்துகிறது. கவுன்சிலிங் நடக்கும் தேதிகளை, இந்த ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:
* மாணவர் தங்கள் பாடப்பிரிவு மற்றும் கல்வி நிறுவனம் எது என்பதை, நாளை முதல், 29ம் தேதிக்குள், ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும்.
* ஜூலை, 1ல் முதற்கட்ட கவுன்சிலிங் துவங்கும்.
* இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜூலை, 7ல் நடக்கும்.
* ஜூலை, 16ம் தேதி முதல், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி.,யில் புதிய கல்வியாண்டு துவங்கும். ஐ.ஐ.டி.யில் ஜூலை, 17 முதல்; ஐ.ஐ.ஐ.டி.,யில் ஜூலை, 23 முதல் வகுப்புகள் துவங்கும்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐ.ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த, 451 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி