சி.பி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு அதிகாரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2015

சி.பி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு அதிகாரம்

தமிழகத்தில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., மற்றும் மத்திய இடைநிலைச் சான்றிதழ் கல்வி அமைப்பான - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்த, பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு:
இதன்படி, அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்த, 105 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் விரைவில் ஆய்வு நடக்கிறது.தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ், அரசு பள்ளிகள், மெட்ரிக், தொடக்கக் கல்வி, ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடப் பள்ளிகள் என, பல பிரிவுகள் உள்ளன. ஆனால், சி.பி.எஸ்.இ., மற்றும்ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளை கண்காணிக்க தமிழக கல்வித்துறையில் தனியாக ஒரு பிரிவு இல்லை.

அனுமதி:தாங்கள் மத்திய அரசின் அனுமதி பெற்றுள்ளதால், தமிழக கல்வித்துறை கண்காணிக்க முடி யாது என்று, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கூறி வந்தன. ஆனால், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கான அனுமதி மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது.பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு, பாதுகாப்பு, கல்விக் கட்டணம் போன்ற வற்றை, மாநில அரசே கண்காணிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கிடையில், தனியார் சுயநிதிப் பள்ளிகளின் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும், நீதிபதி சிங்காரவேலு கமிட்டி, இதுகுறித்து விசாரித்து, அனைத்து சி.பி.எஸ்.இ.,மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளின் அங்கீகாரம் அளிக்கும் அதிகாரத்தை, பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது.

'நோட்டீஸ்':இதனால், அங்கீகாரம் பெறாத சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது. 105 பள்ளிகள் அங்கீகாரம் கோரி, பள்ளிக் கல்வித்துறையிடம் விண்ணப்பித்துள்ளன.

இந்த விண்ணப்பங்களில் உள்ள தகவல்கள் குறித்து, கல்வி அதிகாரி கள் மூலம், பள்ளிகளில் நேரடி ஆய்வு செய்து, அனுமதி வழங்குவது குறித்து கல்வித்துறை முடிவு செய்ய உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி