எம்.இ., - எம்.டெக்., மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2015

எம்.இ., - எம்.டெக்., மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலை அறிவிப்பு

அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட முதுகலை இன்ஜி., படிப்புகளில் சேர, ஜூலை 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில்,
எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான்., போன்ற முதுகலைப் படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த நுழைவுத்தேர்வு முடிவு, கடந்த வாரம் வெளியானது. நாளை முதல், 'ஆன் - லைனில்' மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், முதுகலை இன்ஜி., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. இதற்கு அண்ணா பல்கலையின் இணையதளம் மூலம், ஜூலை 4ம் தேதி வரை, 'ஆன் - லைனில்' விண்ணப்பிக்கலாம்.ஆன் - லைனில் பதிவு செய்யும் தகவல்களை பதிவிறக்கம் செய்து, வங்கி வரைவோலையுடன், 'தமிழ்நாடு மாணவர் சேர்க்கை செயலர், அண்ணா பல்கலை' என்ற முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களை, https:/www.annauniv.edu/tanca2015/ இணைப்பில் பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி