'ஹெல்மெட்' விவகாரம்: தடை கோரி வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2015

'ஹெல்மெட்' விவகாரம்: தடை கோரி வழக்கு

'ஜூலை 1ம் தேதி முதல், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்; இல்லையென்றால், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்' என்ற, தமிழக அரசின் அறிவிப்புக்கு தடை கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, ஜூலை 1ம் தேதி முதல், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், ஹெல்மெட் அணிய வேண்டும்; இல்லையென்றால், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என, கடந்த 18ம் தேதி, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் குமாஸ்தாவான, கோபாலகிருஷ்ணன் என்பவர், தாக்கல் செய்த மனு:இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், ஹெல்மெட் அணிய வேண்டும் என, சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. ஆனால், ஆவணங்களை பறிமுதல் செய்வதற்கு சட்டம் இடமளிக்கவில்லை.'வாகனங்கள் வாங்கும் போது, உற்பத்தியாளர்கள், ஹெல்மெட் வழங்க வேண்டும்' என, மோட்டார் வாகன விதிகளில் கூறப்பட்டு உள்ளது. ஹெல்மெட் அணியவில்லை என்றால், அபராதத் தொகை விதிப்பு தொடர்பாக, 2007 மற்றும் 2011ல், தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.எனவே, கடந்த 18ம் தேதி வெளியான, தமிழக அரசின் அறிவிப்பு, மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிரானது. ஏற்கனவே, அபராதம் விதித்து, தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்புக்கும் எதிரானது. இந்த அறிவிப்புக்கு, தடை விதிக்க வேண்டும்; அதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த பொதுநல மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், இன்று, விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி