யுஜிசி 'நெட்' தகுதித்தேர்வுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு: சிபிஎஸ்இ அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2015

யுஜிசி 'நெட்' தகுதித்தேர்வுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு: சிபிஎஸ்இ அறிவிப்பு

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி ‘நெட்’ தகுதித்தேர்வு ஜூன் 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு சிபிஎஸ்இ இணையதளத்தில் (www.cbsenet.nic.in) பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் இருந்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அனுமதிச்சீட்டு தபாலில் அனுப்பப்படாது.மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற யுஜிசி ‘நெட்’ தேர்வை எழுதியவர்கள் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம். கட்டணம் ரூ.500. இதற்கு ஜூலை 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி