அரசுப் பள்ளியில் படிப்பது பெருமை: பிரான்ஸ் பல்கலை.யின் பரிசு பெற்ற மாணவர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2015

அரசுப் பள்ளியில் படிப்பது பெருமை: பிரான்ஸ் பல்கலை.யின் பரிசு பெற்ற மாணவர்கள்!

அரசு பள்ளியில் படிப்பது பெருமையாக உள்ளது என பிரான்ஸ் பல்கலைக்கழகத்தின்பரிசு பெற்ற புதுச்சேரி மாணவர்கள் கூறியுள்ளனர்.
புதுச்சேரி அறிவியல் இயக்கம், பிரான்ஸ் நாட்டு பாரீஸ் பல்கலைக்கழகம், புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆகியவை இணைந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக 'அறிவியல் உருவாக்குவோம்' என்ற போட்டியை புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தி வருகின்றது.
அதன்படி, அரசு பள்ளிகளில் 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஒரு குழுவுக்கு 5 பேர் இணைந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 'அறிவியல் உருவாக்குவோம்' போட்டிக்காக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களிடமிருந்து, கடந்த ஜனவரியில் 40 ஆய்வுத்திட்டங்கள் பெறப்பட்டு, அதிலிருந்து 12 ஆய்வுத்திட்டங்கள் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டது.இந்த 12 ஆய்வுத் திட்டங்களில் இருந்து நான்கு ஆய்வுத்திட்டங்கள் பரிசுக்காக பிரான்ஸ் பல்கலைக் கழகத்தால் தேர்வு செய்யப்பட்டது. இதில், 'வானிலை நிலையங்களை உள்ளூரில் எப்படி அமைக்கலாம்' என்ற ஆய்வுத் திட்டத்திற்காக முதல் பரிசை செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வென்றனர். இந்த நான்கு பள்ளிகளுக்கும் 600 யூரோ பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து மாணவர்கள் பேசும்போது, ''அரசுப் பள்ளியில் படிக்கிறோம் என்பதைநினைத்துப் பெருமைப்படுகிறோம். காரணம் அரசுப் பள்ளி என்பதால்தான் எங்களுக்கு இந்த வாய்ப்பும், ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களும் கிடைத்தது.அதனால்தான் எங்களால் ஜெயிக்கவும் முடிந்தது’’ என்றனர் சந்தோஷத்தோடு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி