ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2015

ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்
பட்டுள்ளது.பல்கலைக்கழக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் பட்டியலை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) காலை 10 மணி முதல் பல்கலைக்கழக இணையதளத்திலும்மாணவர்கள் காணலாம்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகள், மூன்றாண்டு சட்டப் படிப்புகள், அரசு கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கானகலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.2015-16 கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது.

இதில் பல்கலைக்கழக ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.-எல்.எல்.பி, பி.காம்.-எல்.எல்.பி, பி.சி.ஏ.-எல்.எல்.பி, பி.பி.ஏ.-எல்.எல்.பி. படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 22-ஆம் தேதியோடு நிறைவுபெற்றது.இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டது. மாணவர்களின் பார்வைக்காக பல்கலைக்கழக அறிவிப்புப் பலகையிலும் இந்தப் பட்டியல் ஒட்டப்பட்டது.தரவரிசைப் பட்டியலை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் விண்ணப்பதாரர்கள் காணலாம் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.விண்ணப்ப விநியோகம் நிறுத்தம்: சட்டப் படிப்புகளில் சேருவதற்கான வயது உச்ச வரம்பு சர்ச்சை காரணமாக, இம்முறை படிப்புகள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தாமதமானது.

இந்த நிலையில், மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை நீக்கியும், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை21-ஆக உயர்த்தியும் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 5-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.இந்த நிலையில், வயது உச்ச வரம்பு தளர்வுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 18-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்தது. இதனால், மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகத்தை பல்கலைக்கழகம் நிறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி