உணவு இடைவேளைக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய உடற்பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2015

உணவு இடைவேளைக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய உடற்பயிற்சி

தமிழக பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் வாரத்தில் 2 நாள் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், மதிய உணவு இடைவேளைக்கு முன்பு மாணவர்களுக்கு யோகா தொடர்பான பயிற்சிகளை 10 முதல் 20 நிமிடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 1 முதல் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உணவு இடைவேளைக்கு முன்பு 10 நிமிடங்கள் யோகா பயிற்சியும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு காலை இறைவணக்கத்தை தொடர்ந்து 5நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம் கற்றுத்தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் 2012ல்,மதிய உணவு இடைவேளைக்கு முன்பு எளிய முறை உடற்பயிற்சிகளை மாணவர்களுக்கு கற்றுத்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி யோகா உள்ளிட்ட பல்வேறு எளிய உடற்பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன. யோகா மட்டும் கற்றுத்தரப்பட வேண்டும் என சமீபத்தில் எந்த உத்தரவும் வரவில்லை’ என தெரிவித்தனர். பள்ளி ஆசிரியர் சங்க வட்டாரங்கள் கூறுகையில், ‘உணவு இடைவேளையில் எளிய உடற்பயிற்சி கற்றுத்தரவேண்டும் என வாய்மொழியாக ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், இதை சில பள்ளிகள் பின்பற்றாததற்கு இடைவேளை 40 நிமிடம் மட்டுமே என்பதே காரணம்’ என்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி