கண் பார்வையை பரிசோதிக்க ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2015

கண் பார்வையை பரிசோதிக்க ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷன்

விளையாட்டு, பொழுது போக்கு, செய்திகள் இப்படி எல்லாவற்றிற்கும் மொபைல் ஃபோன் அப்ளிகேஷன்களை நாம் அன்றாடம் பயன்படுத்த தொடங்கி விட்டோம்.

அந்த வகையில் நம் கண்களின் பார்வை திறன் குறித்து அறிவதற்காவே தற்போது ஒரு மொபைல் அப்ளிகேஷன் அறிமுகமாகியுள்ளது.

லண்டனில் கண்பார்வையை பரிசோதனை செய்ய ஒரு லட்சம் பவுண்ட் வரை ஆகும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள் இதற்காகவே ஒரு புதிய அப்ளிகேஷன் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.Kitt peak என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய மொபைல் அப்ளிகேஷனால் கண் பார்வையை துல்லியமாக பரிசோதனை செய்ய முடியும் என்கின்றனர். இந்த ஸ்மார்ட் போனில் விழித்திரையை ஸ்கேன் செய்து, போனின் ப்ளாஷ் லைட்டை கொண்டு கண்ணில் ஏற்படும் நோய்களையும் கண்டறிய முடியும் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.

இதற்கான செலவு வெறும் 300 பவுண்ட மட்டுமே ஆகும் என்பதால் இது அனைத்து தரப்புமக்களிடமும் நல்ல வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது. இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலம் கென்யாவில் 233 பேரிடம் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த பரிசோதனைகள் அனைத்துமே சரியான முடிவுகளை கொடுத்துள்ளதாகவும் லண்டனைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி