ஏழு ஆண்டுகளாக சம்பள உயர்வின்றி தவிக்கும் கல்வித்திட்ட ஊழியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2015

ஏழு ஆண்டுகளாக சம்பள உயர்வின்றி தவிக்கும் கல்வித்திட்ட ஊழியர்கள்

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்து சம்பள உயர்வின்றி தவிப்பதாக அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட( ஆர்.எம்.எஸ்.ஏ.,) ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.அனைத்து குழந்தைகளும் கட்டாயம் 8ம் வகுப்பு வரை படிப்பதை வலியுறுத்தும் எஸ்.எஸ்.ஏ., கல்வி திட்டத்தை மத்திய அரசு 2002ல் கொண்டு வந்தது.
இதையடுத்து, அனைவரும் அவசியம் 10ம் வகுப்பு படிக்கும் நோக்கில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தை 2007ல் கொண்டுவந்தது. இத்திட்டம்மூலம் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம், மாதிரி பள்ளிகளை நிர்வகித்தல், கூடுதல் கட்டடம், அடிப்படை வசதி செய்தல் போன்றவற்றிற்கு மூன்று பிரிவுகளில் நிதி ஒதுக்கீடு செய்கின்றனர்.இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்டந்தோறும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், கணக்கு அதிகாரி, பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முறையே இவர்களுக்கு ரூ.6 ஆயிரம், 7,500, 12,000 சம்பளம் வழங்கப்படுகிறது.தமிழக அளவில் 1,500 பேர் பணிபுரிகின்றனர். கடந்த 7 ஆண்டாக இவர்கள் சம்பள உயர்வின்றிபணிசெய்வதாக புலம்பி தவிக்கின்றனர்.இது குறித்து ஆர்.எம்.எஸ்.ஏ., ஊழியர்கள் கூறியதாவது: 2007ல் இத்திட்டம் துவங்கிய போது பி.எட்., பி.இ., முடித்தவர்கள் பணியில் சேர்ந்தோம். பணி நிரந்தரம் என எண்ணினோம். ஆனால் 7 ஆண்டாக சம்பள உயர்வில்லை. பள்ளி கல்வித்துறையில் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை, என்றனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி