அரசின் நலத்திட்டங்களை பெற இனி 'மைனாரிட்டி' சான்றிதழ்கள் தேவையில்லை; மத்திய அரசு தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2015

அரசின் நலத்திட்டங்களை பெற இனி 'மைனாரிட்டி' சான்றிதழ்கள் தேவையில்லை; மத்திய அரசு தகவல்

சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் கொண்டு வரும் மத்திய அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு இனி மைனாரிட்டி சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டியஅவசியமில்லை என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதாவது, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தை சார்ந்தவர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்தவர்கள் சிறுபான்மையினத்தவராக அறிவிக்கப்பட்டனர்.இந்நிலையில், மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற சிறுபான்மையினத்தவர்கள் எவ்வித மைனாரிட்டி சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. மாறாக, அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் சுய-கையொப்பமிட்ட சாதிச் சான்றிதழை வைத்திருந்தாலே போதுமானது என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக, சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் அபிடவிட்டுகளை சமர்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. இந்நிலையில், இனி அரசின் அத்தனை துறைகளிலும், கல்விநிறுவனங்களிலும் சுய-கையொப்பமிட்ட சாதிச்சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்எனவும், மைனாரிட்டி சானறிதழ்களை வைத்திருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி