எம்.பி.பி.எஸ்., பொது பிரிவு கலந்தாய்வு இன்று துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2015

எம்.பி.பி.எஸ்., பொது பிரிவு கலந்தாய்வு இன்று துவக்கம்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது; 510 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற, 17 பேர் முக்கிய கல்லுாரிகளில் இடம் பெறுகின்றனர்.
அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டில், 2,257 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 85 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன.சுய நிதி மருத்துவக் கல்லுாரிகளில், 530 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. தொடர்ந்து, 23ம் தேதி வரை, பொதுப் பிரிவு கலந்தாய்வும், 'கம்யூனிட்டி' வாரியான கலந்தாய்வு, 24, 25ம் தேதிகளிலும் நடக்கிறது. சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும், பி.டி.எஸ்., இடங்கள் சேர்க்கப்படவில்லை. 'இந்த இடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சேர்க்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.விளையாட்டு வீரர், முன்னாள் ராணுவ வீரரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என, சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேற்று நடந்தது.

இதில், 125 பேர் பங்கேற்றனர். மாற்றுத் திறனாளிகள் பிரிவில், 65 பேர்; விளையாட்டுப் பிரிவில், மூன்று பேர்; முன்னாள் ராணுவ வீரர் குழந்தைகள் பிரிவில், ஆறு பேர் இடம் பெற்றனர்.மாற்றுத் திறனாளிகள்: மொத்தம், 68 இடங்களுக்கு, 80 மாற்றுத் திறனாளிகள் சென்றனர். மூன்று பேர் கொண்ட டாக்டர் குழு, உடல் பாதிப்புக்கான சான்றிதழ்களை ஆய்வு செய்ததோடு, பாதிப்பின் தன்மை குறித்தும் ஆய்வு செய்தது. இதில், 15 பேர் நிராகரிக்கப்பட்டனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி