'பயோ-மெட்ரிக்' வருகைப்பதிவு: பள்ளி ஆசிரியர்களுக்கு அவசியம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2015

'பயோ-மெட்ரிக்' வருகைப்பதிவு: பள்ளி ஆசிரியர்களுக்கு அவசியம்.

ஆசிரியர்களின் முறையான வருகைப்பதிவை உறுதிசெய்யும் விதத்தில், பள்ளிகளில், 'பயோ-மெட்ரிக்' எனும் கைரேகை பதிவு முறையை அறிமுகம் செய்யவேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை முறைப் படுத்தி கண்காணிக்கும் நோக்கில்,
'எஸ்.எம்.எஸ்' முறை திருச்சிமாவட்டத்தில் மட்டும் முன்னோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் இதுவரை பிற மாவட்டங்களில் செயல்படுத்தப்படவில்லை. அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டத்திலும், முழுமைப்படுத்தப்படவில்லை. இதனால், கிராமப்புறம், மலைப்பகுதிகள், தொலைவில் அமைந்திருக்கும் அரசு பள்ளிகளில் சில ஆசிரியர்கள்,தலைமையாசிரியர்கள் முறையாக வகுப்புகளுக்கு வராமலேயே, வருகையை பதிவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. மாநில அளவில், தேர்ச்சி விகிதம் குறைவானதற்கு ஒரு சில ஆசிரியர்களின் முறையற்ற வருகைபதிவும் ஓர் காரணம்.இந்நிலையில், ஆசிரியர்களின் வருகைப்பதிவை முறைப்படுத்தும் பட்சத்தில், கற்றல் கற்பித்தல் முறை மேம்படுத்தப்படும் எனவும், ஆசிரியர்களின் வருகை பதிவை துல்லியமாக, 'பயோ-மெட்ரிக்' முறையை கொண்டு கண்காணிக்கலாம் எனவும் கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.கிராமப்புற, மலைப்பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகள் அல்லது தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளபள்ளிகளை தேர்வு செய்து இத்திட்டத்தை முதல்கட்டமாக அறிமுகம் செய்யலாம். அரசு பள்ளிகளில், 'பயோ மெட்ரிக்' எனும் விரல் ரேகை பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்துவதால் பெரிதளவில் செலவினம் ஏற்படப்போவதில்லை. கல்வியாளர் பாரதி கூறுகையில், ''அரசு தேர்வுத்துறையில் ஊழியர்களின் வருகையை முறைப்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில், அரசு பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்துவது அவசியம். 'பயோ -மெட்ரிக்' திட்டத்தால், தாமதமாக பதிவு செய்பவர்கள், பதிவு செய்யாதவர்கள் என அனைத்தும்துல்லியமாக கண்காணிக்காலம். காலை, மதியம், மாலை என மூன்று நேரங்களிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்கள் வருகையை உறுதிசெய்யவேண்டும். இதனால், ஆசிரியர்களின் வருகையை முறைப்படுத்தி, கற்றல், கற்பித்தல் பணியை மேம்படுத்தஇயலும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி